×

நெல்லை மணல் கடத்தல் வழக்கில் காவல்துறை விசாரணை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

நெல்லை: நெல்லை மணல் கடத்தல் வழக்கில் காவல்துறை விசாரணை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் காவல் உயர்அதிகாரிகள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட போது 30 அடி ஆழத்துக்கு கீழ் தளம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. 30 அடி ஆழம் வரை தோண்டப்பட்டதில் கிடைத்த ஆயிரக்கணக்கான யூனிட் மணலை கடத்தி விற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரளத்துக்கு மணலை கடத்தி விற்றதன் மூலம் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மணல் கடத்தல் தொடர்பான நெல்லை போலீசின் விசாரணை திருப்தியாக இல்லை என்று நீதிபதிகள் கறுத்தது தெரிவித்துள்ளனர். மணல் கடத்தல் வழக்கு பற்றி நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Tags : High Court ,judges ,police investigation ,Nellai , Nellai, sand smuggling
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...