×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் சென்னையில் காலமானார்

சென்னை: அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் சென்னையில் காலமானார். கொரோனா பாதிப்புக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் 2 வாரமாக சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் உயிர் பிரிந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு ஏற்கெனவே உடல் நல பிரச்னைகள் இருந்ததால், அவரது உடல்நிலை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி அவருக்கு சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் உயிர் பிரிந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் வெற்றிவேல்.  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பிறகு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1996-ல் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தபோது தீவிரமாக பணியாற்றியவர் வெற்றிவேல். தமிழ்மாநில காங்கிரசில் இருந்த போது சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகி டிடிவி தலைமையிலான அமமுகவில் சேர்ந்தார்.

செயலலிதா போட்டியிடுவதற்காக சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியை விட்டுத்தந்தவர் வெற்றிவேல். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பதவியை இழந்தார் ஜெ. சிறையில் இருந்து வெளியே வந்த ஜெ. போட்டியிட  ஆர்.கே.நகர் தொகுதியை விட்டுக்கொடுத்தார்  வெற்றிவேல். 2011-ல் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, 2016-ல் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். ஜெ. மறைவுக்கு பிறகு சசிகலாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தவர் வெற்றிவேல். சசிகலா, டிடிவி தினகரனுக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் வெற்றிவேல்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எல்எல்ஏக்கள் 18 பேரில் வெற்றிவேலும் ஒருவர். எடப்பாடி அரசை எதிர்த்ததால் தகுதிநீக்கம் செய்ய்யப்பட்டார் வெற்றிவேல். தகுதி நீக்கத்தை அடுத்து தனது பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியை இழந்தார் வெற்றிவேல்.


Tags : Vetrivel ,AIADMK ,Chennai , AIADMK treasurer Vetrivel dies in Chennai
× RELATED வெற்றிவேல் வீரவேல் முழக்கம்