×

சென்னை- நாகர்கோவில் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு தொடக்கம்...தெற்கு ரயில்வே ஆஃபர்!!!

சென்னை: பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வருகிற 25-ம் தேதி சரஸ்வதி பூஜையும், அடுத்த மாதம் 14-ம் தேதி தீபாவளி பண்டிகையும்  வருவதையொட்டி, சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்வதற்காக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வரும் அக்டோபர் 23,24,29-ம் தேதிகளிலும், நவம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில்  சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில்-சென்னை எழும்பூர் இடையே அக்டோபர் 26,27-ம் தேதிகளிலும் நவம்பர் 1, 15,16-ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு  ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் புறப்படும் விவரங்கள்:

1. சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (ரயில் எண் 06063) இடையே சிறப்பு ரயில் வரும் 23,24,29-ம் தேதிகளிலும், நவம்பர் 12,13-ம் தேதிகளிலும் இரவு 06.55 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 07.30  மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

2. -நாகர்கோவில் -சென்னை எழும்பூர் (ரயில் எண் 06064) சிறப்பு ரயில் வரும் 26,27-ம் தேதிகளிலும் நவம்பர் 1, 15,16-ம் தேதிகளிலும் முதல் மாலை 04.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து  புறப்பட்டு மறுநாள் காலை 05.00 மணிக்கு சென்னை  எழும்பூர் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் சென்னையில் இருந்து செல்லும் போது, தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில்  நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவிலில் புறப்படும் போதும் மேற்கண்ட ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.  



Tags : Booking ,Chennai ,Nagercoil ,Southern Railway , Chennai-Nagercoil festive special trains announced: Booking starts from 8 am tomorrow ... Southern Railway offer !!!
× RELATED டிக்கெட் முன்பதிவு மையம் இன்று மதியம் வரை மட்டுமே