×

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்.: ஆம்னி பேருந்துகள் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்

சென்னை: தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சேவை நாளை முதல் தொடங்கப்படுகிறது. இதற்காக ஆம்னி பேருந்துகளை சுத்தப்படுத்தி தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கள் கடந்த 6 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகளை பண்டிகை காலம் நெருங்குவதை கருத்தில் கொண்டு நாளை முதல் இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள 4000 பேருந்துகளில் தமிழக பதிவு எண் கொண்ட 500 பேருந்துகளை முதல் கட்டமாக இயக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்துகளை சுத்தப்படுத்தி தயார்ப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு விதித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Omni ,Tamil Nadu , Omni buses to operate in Tamil Nadu from tomorrow: Omni buses will be cleaned
× RELATED சென்னையில் இருந்து வெளியூர் செல்லும்...