×

பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டிலிருந்து வெளியேறிய 17 வயது சிறுமியை 22 நாட்களாக கோழி பண்ணையில் அடைத்து பலாத்காரம் : ஒடிசாவில் பயங்கரம்

கட்டாக்,:பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டை விட்டு ஓடிய 17 வயது சிறுமியை 22 நாட்களாக கோழி பண்ணையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஒடிசாவில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள தீர்டோலில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனது பெற்றோருடன் சண்டை போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். கட்டாக்கின் ஓஎம்பி சதுக்கத்தில் உள்ள பஸ் நிலையத்தில் வெகு நேரமாகி நின்றிருந்த சிறுமியை பார்த்த ஒருவர், விசாரித்து விட்டு, ‘உன்னை உனது வீட்டிற்கு அழைத்து செல்கிறேன்’ என உறுதியளித்தார்.

ஆனால் சிறுமியை சவுலியாகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் உள்ள கோழி பண்ணைக்கு அழைத்து சென்றார். அங்கு 22 நாட்கள் பலவந்தமாக ஒரு அறையில் அடைத்து வைத்தார். பண்ணையில் 2 பேர், சிறுமியை மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து பண்ணை சோதனை நடத்தி சிறுமியை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார், ‘மற்றொருவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்று கட்டாக் நகர போலீஸ் துணை ஆணையர் தெரிவித்தார். கைதானவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மீட்டகப்பட்ட சிறுமி மாவட்ட குழந்தைகள் நல குழு முன் ஆஜர்படுத்தப்பட்டு, குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிவிட்டதாக பாஜவின் மாநில பொதுச் செயலாளர் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘இதுபோன்ற சம்பவங்களால் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், இந்த சம்பவம் குறித்து குற்றப்பிரிவு விசாரிக்க வேண்டும்’ என்றார்.

Tags : parents ,fight ,home ,poultry farm ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு