×

தனியார் தொலைக்காட்சி முறைகேடு எதிரொலி: செய்தி சேனல்களின் trp ratings வெளியீடு 3 மாதங்களுக்கு நிறுத்துவதாக BARC அறிவிப்பு.!!!

டெல்லி: செய்தி சேனல்களுக்கான டி.ஆர்.பி. ரேட்டிங் வெளியிடுவதை 3 மாதங்களுக்கு நிறுத்து வைக்கவுள்ளதாக பார்க் அமைப்பு அறிவித்துள்ளது. டி.ஆர்.பி மூலம் தொலைக்காட்சி பார்வையாளர்கள் குறித்த மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த  முறைப்படி, எந்த நிகழ்ச்சி அல்லது சேனல்கள் அதிகம் பார்க்கப்படுகின்றன என்பதை மதிப்பிட டிவியில் ஒரு மீட்டர் பொருத்தப்படும். இதன் மூலம், விளம்பர நிறுவனங்கள், இந்த மதிப்பீட்டைப் பயன்படுத்தி தொலைக்காட்சிகளுக்கு  விளம்பரங்களை தருகின்றன. மதிப்பீட்டை பொருத்து செய்தி சேனல்கள் வருவாய் ஈட்டுகின்றன.

2014-ம் ஆண்டு தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான கொள்கை வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. அதன் கீழ், ஜூலை 2015-ல், இந்தியாவில் தொலைக்காட்சி மதிப்பீடுகளை வழங்கும் அமைப்பாக பார்க் (BARC)  அமைப்பானது அங்கீகரிக்கப்பட்டது. இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளை, விளம்பரதாரர்களின் இந்தியன் சொசைட்டி மற்றும் இந்திய விளம்பர முகமை ஆகியவை பார் அமைப்பில் தொழில்துறை பிரதிநிதிகளாக உள்ளனர். சேகரிக்கப்பட்ட மதிப்பீட்டு  தரவுகளை பகுப்பாய்வு செய்து ஒவ்வொரு வாரமும் பார்க் வெளியிடுகிறது.

இதற்கிடையே, சில நாட்ககளுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கி வரும் சில தனியார் செய்தி சேனல்கள், டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டு பார்வையாளர்களையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதாக போலீசார்  தெரிவித்தனர். இந்த சேனல்களை எந்நேரமும் ஆன் செய்தே வைத்திருப்பதற்கு மாதம் ரூ.400 முதல் ரூ.700 வழங்கப்பட்டு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். டி.ஆர்.பி. ஆனது, மீட்டர் பொருத்தப்பட்ட வீடுகளில் பார்க்கப்படுவதை  வைத்துதான் கணக்கிடப்படுகிறது. படிப்பறிவில்லாத ஏழை மக்கள் கூட, தங்கள் வீடுகளில் இந்த ஆங்கில சேனல்களை ஆன் செய்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

இந்நிலையில், செய்தி சேனல்களுக்கான டி.ஆர்.பி. ரேட்டிங் வெளியிடுவதை மூன்று மாத காலத்திற்கு நிறுத்து வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், செய்தி சேனல்களின் பார்வையாளர்கள் குறித்த தகவல் மட்டும் வெளியிடப்படும்  என்றும் தனித்தனி சேனல்களின் பார்வையாளார்கள் எண்ணிக்கை வெளியிடப்படாது என்றும் தெரிவித்துள்ளது. டி.ஆர்.பி. ரேட்டிங் வைத்து விளம்பரம் செய்யும் செய்தி சேனல்களுக்கு இது பெருத்த அடியாக கருதப்படுகிறது.



Tags : television scandal ,news channels ,BARC , Echo of private television scandal: BARC announces suspension of news channels' trp ratings for 3 months !!!
× RELATED வெறுப்பு சந்தையை திறந்து வைத்துள்ள...