×

அமெரிக்க அதிபர் டிரம்ப் மகனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

வாஷிங்டன்,:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு 3 மனைவிகள், 5 குழந்தைகள். முதல் மனைவி இயாவாவை 1977ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட டிரம்ப், அவரை 1992ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இயாவா மூலம் ஜான் டிரம்ப், எரிக் டிரம்ப் என்ற மகன்களும் இவாங்கா டிரம்ப் என்ற மகளும் உள்ளனர்.
1993ம் ஆண்டு மர்லா ஆன் மப்லஸ் என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தார் டிரம்ப். மர்லா ஆன் மப்லஸ் மூலம் டிப்னி டிரம்ப் என்ற மகள் உள்ளார். 2வது மனைவியை 1999ம் ஆண்டு டிரம்ப் விவாகரத்து செய்தார். பின்னர் மெலனியாவை 2005ம் ஆண்டு டிரம்ப் திருமணம் செய்தார். மெலனியா மூலம் பரோன் டிரம்ப் (14) என்ற மகன் உள்ளான். பெற்றோருடன் வசிக்கிறான்.

இதற்கிடையில், கடந்த 1ம் தேதி டிரம்ப், மெலனியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் தனிமைப்படுத்தி கொண்டனர். தற்போது டிரம்ப், தான் குணமடைந்து விட்டதாக தெரிவித்து வருகிறார். மெலனியா, குணமடையாததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், டிரம்ப்-மெலனியாவின் மகன் பரோன் டிரம்பிற்கு தொற்று பரவியிருந்தது தெரியவந்துள்ளது. எப்போது தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதை மெலனியா டிரம்ப் வெளியிடவில்லை. தற்போது அவன் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக மெலனியா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே பரோன் டிரம்பிற்கு வைரஸ் தொற்று பரவிய தகவலை முதலிலேயே வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எப்போது குணமடைந்தார் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.

Tags : Corona ,Trump ,US , US President, Trump's son, corona infection, vulnerability
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்