×

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் நெஞ்சுவலி : அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை, :வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திடீர் நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை, அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்தார். அப்போது நேற்று இரவு அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இன்று அவரது இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யும் ஆஞ்ஜியோ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவின்படி அவருக்கு மேலும் சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.சென்னை, அப்போலோ மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறும் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சரின் உதவியாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Dindigul Srinivasan ,Apollo Hospital , Minister of Forests, Dindigul Srinivasan, Chest pain
× RELATED தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த...