×

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: தென் மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும் , குறைந்தபடச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாக்கக்கூடும் என கூறியுள்ளனர். மேலும் தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு 11.30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 2.5 முதல் 3.5 மீட்டர் வரை எழும்பக்கூடும் என மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் இரணியல்(கன்னியாகுமரி), பெரியாறு(தேனி) ஆகிய பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கன்னியாகுமரியில் உள்ள சித்தார்-குளச்சல் பகுதியில் 4 செ.மீ மழையும், வால்பாறை-சின்னக்கல்லார்-சுலாக்கேடு-பாபநாசம்- பேச்சிப்பாறை ஆகிய பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.


Tags : districts ,Western Ghats ,Tamil Nadu , Chance of rain in the next 24 hours in the districts adjoining the Western Ghats in Tamil Nadu .: Meteorological Center Information
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...