×

இயற்றப்படும் சட்டங்கள் அனைவருக்கும் புரியும்படி எளிமையான ஆங்கிலத்தில் இயற்றக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதில்தர உத்தரவு

புதுடெல்லி,: சட்டங்களை இயற்றும் போது அது அனைவருக்கும் புரியும்படியான எளிமையான ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.    இன்றைய சூழலில் அனைவருக்கும் சட்டத்தைப்பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதில் குறிப்பாக நம் நாட்டில் சட்டத்துறையில் பணிபுரிபவர்களைத் தவிர்த்து, மற்றவர்களில் நூற்றில் 10 பேருக்கு மட்டுமே சட்டத்தை பற்றிய அடிப்படை அறிவு இருக்கிறது. இதில் சட்டத்தின் முக்கிய நெறி மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக இருந்தாலும், அதன் மற்றொரு முக்கியம் ஒரு மனிதனை மற்றவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதுமே ஆகும். ஆனால், இதை மக்கள் உணர்ந்திருந்தால், இன்று நம் நாட்டில் 90 சதவீத மக்களுக்கு சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு இருந்திருக்கும். ஆனால் இந்த நிலை மக்களிடம் மாற வேண்டும் என கருத்து தெரிவிக்கப்பட்டாலும், இயற்றப்படும் அனைத்து சட்டங்களும் அனைவருக்கும் புரியும் படியாக எளிமையானதாக இருக்க வேண்டும் என்பது சட்ட வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில்,சுபாஷ் விஜயராயன் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,சட்டங்களை இயற்றும் பொழுது அது எளிமையான ஆங்கிலத்தில் இருக்கும்படி வெளியிட வேண்டும். கடுமையானதாக இல்லாமல் அது சாமானியர்களுக்கும் புரிய வேண்டும். அதனால் இந்த விவகாரத்தில்நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் கோரிக்கைக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடப்பட்டது.

Tags : Central Government , Laws, English, Federal, Order
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...