பிரியங்கா காந்தி குறித்து அநாகரீகமான பதிவை வெளியிட்டவரை மும்பை காவல்துறை சைபர் செல் கைது செய்தது

மும்பை, :மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எதிராக சமூக ஊடகங்களில் அநாகரீகமான பதிவை வெளியிட்ட ஒஸ்மானாபாத்தில் வசிக்கும் செயில் ஷரனப்பா கஜ்ஜே என்பவரை மும்பை காவல்துறை சைபர் செல் கைது செய்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட கஜ்ஜே, தனது தந்தை கீசர்ஜவல்கேகர் என்ற பெயரில் பேஸ்புக்கில் போலி முகவரி கொடுத்து, அவ்வப்போது சர்ச்சைக்குரிய பதிவுகளை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எதிராக தொடர்ந்து ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். அதையடுத்து கடந்த 9ம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. புனே மாவட்டத்தின் சிக்காலி பகுதியில் பதுங்கியிருந்த கஜ்ஜேவை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர், ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர் என்பதால், அவருடன் ெதாடர்புடைய சிலரையும் பிடித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories:

>