×

கொரோனாவைக் கண்டுபிடிக்கும் நாய்!

நன்றி குங்குமம்

மருத்துவ உலகின் ஹாட் டாக் இதுதான். கொரோனா பாசிட்டிவ்வா என்று கண்டுபிடிக்க ஸ்வாப் டெஸ்ட், ஆன்டிபாடி டெஸ்ட் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முடிவு தெரிய ஒன்று அல்லது இரண்டு நாட்களாவது தேவைப்படுகிறது. இந்நிலையில் ஒரு நிமிடத்துக்குள் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று மோப்பம் பிடித்துச் சொல்கின்றன ஜெர்மனியின் இராணுவத்துறைக்குச் சொந்தமான எட்டு நாய்கள்! வாசனையை நுகர்வதில் மனிதனைவிட ஆயிரம் மடங்கு அதிகமான திறன் வாய்ந்தது நாய். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் வாசனை வித்தியாசமானது.

இந்த வாசனையைக் கண்டறியும் பயிற்சியை அந்த நாய்களுக்கு வழங்கியிருக்கின்றனர். நாய்களை வைத்து ஆயிரம் பேரிடம் கொரோனா சோதனை செய்ததில் 94 சதவீத முடிவு துல்லியமாக இருந்திருக்கிறது. ஜெர்மனியில் உள்ள ஏர்போர்ட், விளையாட்டு மைதானங்கள் உட்பட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் நாய்களை வைத்தே கொரோனா பரிசோதனை செய்யவிருக்கின்றனர். அடுத்து அந்த எட்டு நாய்களும், கொரோனாவா அல்லது சாதாரண காய்ச்சலா என்று கண்டறியும் பயிற்சிகளை மேற்கொள்ளஇருக் கின்றன.

தொகுப்பு: த.சக்திவேல்


Tags : The dog that finds the corona!
× RELATED நாயை விட்டு ஆசிரியையை கடிக்க வைத்த பள்ளி தாளாளர் கைது