×

சேலம் சிலுவம்பாளையத்தில் காரிய நிகழ்ச்சி : முதல்வரின் தாயார் அஸ்தி காவிரி ஆற்றில் கரைப்பு; அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

சேலம்,:சேலத்தில் உடல்நலக்குறைவால் காலமான முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் அஸ்தி இன்று காவிரியில் கரைக்கப்பட்டது. வீட்டில் நடந்த காரிய நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் 12ம் தேதி காலமானார். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சிலுவம்பாளைத்தில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இன்று தவுசாயம்மாளின் காரியம் அவரது வீட்டில் நடந்தது. அப்போது தவுசாயம்மாள் படத்திற்கு மாலை அணிவித்து படையலிடப்பட்டது. சிவாச்சாரியார்கள் சிறப்பு மந்திரங்களை ஓதினர். இதில் தவுசாயம்மாளின் மகள் விஜயலட்சுமி, மகன்கள் கோவிந்தராஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது மனைவி ராதா, மகன் மிதுன், மைத்துனர் வெங்கடேஷ் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

பிறகு தவுசாயம்மாள் உடல் தகனம் செய்யப்பட்ட மயானத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தினருடன் ஊர்வலமாக சென்றார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், எம்எல்ஏக்கள் வெங்கடாசலம், சக்திவேல், செம்மலை மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர்தவுசாயம்மாளின் அஸ்தி கலசத்தில் எடுத்து செல்லப்பட்டு, அங்குள்ள காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. பின்னர் வீடு திரும்பி, மீண்டும் தாயாரின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை சிலுவம்பாளையத்தில் இருந்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். நாளை கார் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். மறுநாள் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கும் அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

Tags : Event ,Chief Minister ,river ,Salem Chiluvampalayam ,participants ,Asti ,Cauvery ,ministers , Salem, Chiluvampalayam, Asti, Cauvery
× RELATED உங்க 10 ஆண்டு ஆட்சியில் எல்லாமே போச்சு…...