×

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு இன்று 105வயது: கூடுதல் ரயில் சேவைக்கு எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மட்டுமின்றி தென்னையிலிருந்து கிடைக்க கூடிய இளநீர்,தேங்காய்மஞ்சி,கொப்பரை உள்ளிட்டவைகளும்  வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. வணிகத்தில் சிறந்து விளங்கி வரும் பொள்ளாச்சியில்  1915ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தின்போது ரயில் சேவை துவங்கியது.  அப்போது, கோவை போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி வரையிலும் முதற்கட்ட மீட்டர் கேஜ் வழித்தடத்தில் ரயில் சேவையும், அதன்பின் 1928ல் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வரையிலும், 1932ம் ஆண்டு பொள்ளாச்சியிலிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கும் அடுத்தடுத்து  ரயில் சேவை துவங்கியது.

பொள்ளாச்சி வழியாக பாலக்காடு, கோவை, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ரயில் சேவை இருந்ததால், பொள்ளாச்சியிலிருந்து பிற பகுதிக்கு  ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமானது. மேலும் இங்கிருந்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சரக்கு ரயில் இயக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் திண்டுக்கல் - போத்தனூர் இடையேயான அகல ரயில்பாதை திட்டம் கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி மீட்டர்கேஜ் இருப்பு பாதையை அகல ரயில்பாதை பணிக்காக ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது.

அதன்பின் 2009ம் ஆண்டு முதல் திண்டுக்கல்-போத்தனூர் வரையிலான அகல ரயில் பாதைக்கான பணி ஆரம்பிக்கப்பட்டது.  இப்பணி முழுமையாக நிறைவு பெற்று, திண்டுக்கல் பொள்ளாச்சி வரையிலான அகல ரயில்பாதையில் கடந்த 2015ல் ரயில்சேவை துவங்கியது.  அதன்பின்,  பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு மற்றும் கோவை, மதுரை, திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய அகல பாதையில் ரயில்சேவை துவங்கியது.பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் உருவாகி  இன்று 15ம் தேதியுடன் 105ம் ஆண்டை எட்டியுள்ளது. இத்தருணத்தில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து திருநெல்வேலி  வழியாக நாகர்கோவிலுக்கும். கோவையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சியிலிருந்தும்  இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதல்  கூடுதல் ரயில் சேவையை ஏற்படுத்த வேண்டும் என்பது பொள்ளாச்சி நகர பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Pollachi ,railway station , Pollachi Railway, to the station, 105 years old
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!