×

ரேகை வெச்சா ஏத்துக்கல.. பயோ மெட்ரிக் கருவியால் ரேஷன் கடைகளில் வாக்குவாதம்

கோவை: கோவை மாவட்டத்தில் 1,405 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தெற்கு தாலுகா வட்டாரத்தில் கடந்த 1ம் தேதி முதல் பயோ மெட்ரிக் என்ற விரல் ரேகை பதிவு திட்டம் பரிட்சார்த்த அடிப்படையில் மேற்ெகாள்ளப்பட்டது. நேற்று மாவட்ட அளவில் அனைத்து கடைகளிலும் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவியில், ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ள குடும்ப தலைவர் சென்று விரல் ரேகை வைக்கவேண்டும். இந்த ரேகை ஸ்கேன் செய்து சரி என ஏற்கப்பட்டால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வாங்க முடியும். பெரும்பாலான கடைகளில் இந்த விரல் ரேகை பதிவு ஏற்கப்படவில்லை. ஸ்கேன் சோதனையில் ேதால்வி கிடைத்தது. சர்வரும் பல இடங்களில் செயல் இழந்தது. கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். பல்வேறு பகுதி கடைகளில் விற்பனையாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

‘‘எங்களுக்கு ரேகை பதிவு வேண்டாம். பேனாவில் எழுதி கொடுத்து பொருள் கொடுங்கள்’’ என மக்கள் தகராறு செய்தனர். இதற்கு விற்பனையாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ‘‘பழைய நடைமுறையில் பொருட்கள் தர முடியாது. ஸ்கேன் செய்து, அது ஏற்றுக்கொண்ட பிறகு உங்களது செல்போன் நம்பருக்கு ஓடிபி ரகசிய கடவு எண் வரும். அதை சொன்னால்தான் பொருட்கள் வாங்க முடியும்’’ எனக்கூறினர். சிலரிடம் செல்போன் எண் கிடையாது. ஆதார் அடையாள அட்டையில் உள்ள செல்போன் எண் மட்டுமே பயன்படுத்தும் நிலைமை இருக்கிறது. ஆதாரில் உள்ளபடியே கைரேகை பதிவு வைக்கவேண்டும்.
இதில் ஏதாவது குளறுபடி இருந்தால் கார்டு ஸ்கேன் ஆகாது. குழப்பத்தில் உள்ள திட்டத்தை எப்படி நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்? என பொதுமக்கள் விற்பனையாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் கூறுகையில், ‘‘மதியம் 12 மணி வரைக்கும் சர்வர் பிரச்னை இருந்தது. இதை சென்னை அலுவலகத்தில் தெரிவித்து சரி செய்தோம். அதற்கு பிறகு ரேஷன் கார்டுகளை ஸ்கேன் செய்ய முடிந்தது. இனி பிரச்னை எதுவும் இருக்காது. ரேகை பதிவுகளை கருவி முழுமையாக ஏற்கிறது. சரியாக பதிவு செய்தால் போதும்’’ என்றார்.

Tags : Rekha Vecha Ethukkala ,ration shops , Rekha Vecha, Bio Metric Tool, Ration Stores, Argument
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு