×

திருவில்லிபுத்தூர்-சிவகாசி இடையே உடைசல் சாலையில் உயிர் பயத்தில் மக்கள்: உடன் சீரமைக்க கோரிக்கை

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர்-சிவகாசி செல்லும் சாலை மோசமாக உள்ளதால், சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவில்லிபுத்தூர்-சிவகாசி செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக சாலைகள் பெயர்ந்துள்ளது. குறிப்பாக திருவில்லிபுத்தூர் சாலையில் செங்குளம் விலக்கு பகுதியில் செல்லும் சாலையும், திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் அருகே உள்ள சாலை, மல்லி அருகேயுள்ள சாலை என சிவகாசி சாலையில் பல்வேறு இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளது. கனரக வாகனங்கள் உள்பட தினமும் ஏராளமான வாகனங்கள் இருசக்கர வாகனங்களும் இந்த வழியாகதான் சிரமத்துடன் சென்று வருகின்றன. எனவே வாகன ஓட்டிகள் நலனுக்காக இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுபற்றி ரமேஷ் கூறும்போது, சாலையில் சில இடங்களில் பள்ளமாக உள்ளது. பல இடங்களில் சாலைகள் பெயர்ந்து போய் உள்ளது. மழை பெய்யும்போது சாலைகள் பெயர்ந்துள்ள இடத்தில் செல்லும் போது கீழே விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சாலையில் பல்வேறு சிறிய மற்றும் பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளன. இதனை சரி செய்ய வேண்டும் அல்லது தற்காலிகமாக சாலையில் உள்ள பள்ளங்களை மூடவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பணி முடிந்து இரவு நேரங்களில் வரும் போது பள்ளம் இருப்பது தெரியாமல் பள்ளத்தில் வாகனம் செல்லும்போது வாகனம் பழுது உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே சாலையை உடன் சரி செய்ய வேண்டும் என்றார்.



Tags : road ,Srivilliputhur-Sivakasi , Srivilliputhur-Sivakasi, breaking road, people, request to renovate
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி