×

ஊட்டி - எடக்காடு சாலையில் அபாயகரமான மரங்கள் அகற்றும் பணி துவக்கம்

ஊட்டி: தங்காடு பகுதியில் சாலையோரத்தில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் வடகிழக்கு இன்னும் தீவிரம் அடையாத நிலையில், மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக காற்று வீசி வருகிறது. அதேபோல் சில சமயங்களில் மழையும் பெய்து வருகிறது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையோரங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகேயுள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஊட்டியில் இருந்து எடக்காடு செல்லும் சாலையில் தங்காடு பகுதியில் மருத்துவமனை, பள்ளி அருகே வளர்ந்துள்ள மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்ேபாது, மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்ததால், அதனை ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், தங்காடு - ஊட்டி வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேசமயம், அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Tags : Commencement ,removal ,road ,Ooty - Edakkadu , Ooty - Edakkadu, road, dangerous trees, removal work, start
× RELATED தாமதமாகும் தடுப்புக்கட்டை பணிகள்...