×

பண்ணாரி வனப்பகுதியில் ஆண் புலி பலி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பவானிசாகர் வனச்சரகம்  பண்ணாரி வனப்பகுதியில் உள்ள துருகமலை என்ற இடத்தில் வனத்துறை ஊழியர்கள்  ரோந்து சென்றபோது, அப்பகுதியில் புலி இறந்து கிடப்பதை கண்டனர். இது குறித்து  உடனடியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் நிஹார்  ரஞ்சன் உத்தரவின்பேரில், மாவட்ட வன அலுவலர் அருண்லால், பவானிசாகர் வனச்சரக  அலுவலர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் இறந்த புலியின் உடலை நேற்று  வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் பிரேத பரிசோதனை செய்தார். இதில் உயிரிழந்தது 8 வயது மதிக்கத்தக்க ஆண் புலி எனவும், உடலில் காயங்கள் ஏதும்  இல்லாததால் இயற்கை மரணம் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.  இதையடுத்து இறந்த புலியின் உடலில் இருந்து நகங்கள் மற்றும் பற்கள்  அகற்றப்பட்டு புலியின் உடல் வனப்பகுதியில் எரியூட்டப்பட்டது.

Tags : forest ,Pannari , Bannari, in the forest, male tiger, killed
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின்...