மோவூர் கண்டிகை கிராமத்திற்கு மயானபாதை அமைக்க கோரிக்கை.: பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மோவூர் கண்டிகை கிராமத்தில் மயானத்துக்கு பாதை அமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டி எழுந்துள்ளது. பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோவூர் கண்டிகை கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் வாசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் சுடுகாட்டுக்கு செல்ல சரியான பாதை இல்லாததால் சடலத்தை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லும் அவல நிலை உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டு ஆகும். மயானத்துக்கு சடலத்தை கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாக மோவூர் கண்டிகை கிராமமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சுடுகாட்டிற்கு செல்ல பாதை உருவாக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.

Related Stories:

>