×

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படுவதால் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டங்களை சேரந்த கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று இரவு 9.30.மணி முதல் இன்று காலை 4.00 மணி வரைஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. அதன்பிறகு அங்கு தொடர் மழையின் காரணமாக தண்ணீர் அளவு உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நள்ளிரவில் பள்ளிபட்டு பாலத்தை கடக்கும். இன்று காலை நல்லாட்டூர் அணை வரை வரும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்தகவலை வருவாய்துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் என்றும் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,areas , Collector warns flood-prone coastal areas to be safe
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...