×

அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் திறப்பு

பள்ளிப்பட்டு: திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை பேரூராட்சி புதுத் தெருவில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை ஏற்று பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.80 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதனை அடுத்து அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு குழந்தைகளை கவரும் வகையில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. தொடக்க விழாவில், பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ திறந்துவைத்தார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, பேரூர் அதிமுக செயலாளர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : building ,Anganwadi Center , Opening of new building for Anganwadi Center
× RELATED ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் திருப்பாலைக்குடி மக்கள் கோரிக்கை