×

பெரியபாளையம் அருகே பெண் கொலை வழக்கில் உறவினர் கைது

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே நடந்த பெண் கொலை வழக்கில், அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர். பெரியபாளையம் அருகே அக்கரப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் எல்லையன் மனைவி கௌரி (42). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பன்றிகளை மேய்க்க சென்றபோது, பக்கத்து கிராமமான கன்னிகைப்பேர் மதுரவாசல் அரசு மேல்நிலைப் பள்ளி பின்புறம் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று கவுரியின் உறவினர் குமார் (35) உள்ளிட்ட 4 நபர்களை பிடித்து போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். இதில், கவுரியின் உறவினர் குமார் என்பவர் கவுரியை கற்பழித்து, அவரை கொலை செய்து விட்டு பின்னர் அவரது காதில், கழுத்தில் இருந்த நாலரை சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு ஓடியது தெரியவந்தது. மேலும், கவுரியை கொலை செய்ததற்காக குமாரை போலீசார் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Periyapalayam , Relative arrested in female murder case near Periyapalayam
× RELATED சவுகார்பேட்டை கொலை வழக்கு: கைதானவர்கள் சென்னைக்கு அழைத்து வந்த காவல்துறை