மாமல்லபுரம் இசிஆர் சாலையில் பொதுமக்களுக்கு இலவச முககவசம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்து போலீசார் சார்பில், இலவசமாக முககவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்துக்கு ஏராளமான பொதுமக்கள் நேற்று சென்றனர். இதில், பலர் கொரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாமல், முககவசம் அணியாமல் வந்தனர்.அவர்களை, மாமல்லபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி தலைமையில், எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்களுக்கு கொரோனா பற்றிய முழு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக முககவசம் வழங்கி, மாமல்லபுரம் நகருக்குள் செல்ல அனுமதித்தனர்.

Related Stories:

>