×

சென்னையில் இருந்து ஜோத்பூர் மற்றும் ஜெய்ப்பூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்: தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்

சென்னை: மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மத்திய ரயில்வே அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய சென்னை பகுதிகளில் வசிக்கக்கூடிய ராஜஸ்தான் சமுதாயத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் சென்னையிலிருந்து அவர்களது சொந்த மாநிலத்துக்கு பணி நிமித்தமாகவு சென்றுவர வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே மேற்கண்ட ரயில்கள் இயக்கப்படுவதால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஏற்கனவே மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தேன் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து வருகிற பண்டிகை காலத்திற்கு முன்னதாகவே என் தொகுதி வாழ் மக்களின் நீண்ட நாள் குறையை தீர்த்து தினசரி அந்த ரயிலை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Jaipur ,Jodhpur ,Dayanidhi Maran MP , Daily train from Chennai to Jodhpur and Jaipur: Dayanidhi Maran MP insists
× RELATED சென்னை பேராசிரியைக்கு ரயிலில் பாலியல் தொல்லை: முதியவர் கைது