×

போக்குவரத்து போலீசாரை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்

அண்ணாநகர்: திருமங்கலம் நேரு நகர் 2வது அவென்யூவில் 30 வருடமாக 200க்கும் மேற்பட்ட கோழிக்கடை, சூப்பர் மார்க்கெட், மெடிக்கல் மற்றும் நகைகடைகள் உள்ளன. இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பதாக போக்குவரத்து போலீசார் பேரிகார்டு வைத்து விட்டுச்சென்றனர். இதனால் அந்த வழியாக கடைக்கு வருபவர்கள் வாகனங்கள் தடை செய்யப்பட்ட பகுதி என்ற போர்டு பார்த்துவிட்டு கடைக்கு வரமால் திருப்பிச் செல்கின்றனர். இதனால் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்தனர். எனவே போக்குவரத்து போலீசாரிடம் போர்டை அகற்றும்படி கூறினர். ஆனால் அதற்கு போக்குவரத்து போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திருமங்கலத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திருமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

Tags : Merchants roadblock condemning traffic police
× RELATED போக்குவரத்து காவலர் மாயம்