மாமுல் கேட்டு பெயின்டருக்கு வெட்டு

பெரம்பூர்: அயனாவரம் வசந்தா கார்டன் முதல் தெருவை சேர்ந்தவர் குகன்(30). பெயின்டர். கடந்த 11ம் தேதி வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ரமேஷ் (எ) மாணிக்கவாசகம் என்ற நபர் குகனிடம் மது அருந்த பணம் கேட்டு வெட்டினார். புகாரின்பேரில் அயனாவரம் போலீசார் மாணிக்கவாசகத்தை கைது செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மாணிக்கவாசகத்தின் தம்பிகளான சீனு(24) மற்றும் கார்த்திக்(22) ஆகியோர் வந்து குகனிடம்  மீண்டும் பணம் கேட்டு குகனை மீண்டும் வெட்டினர். புகாரின்பேரில் அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனு மற்றும் கார்த்திக்கை கைது செய்தனர்.

Related Stories: