×

தங்கம் கடத்தலில் தொடர்பு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் முன் ஜாமீன் கோரி மனு

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கம் கடத்தல் சம்பவத்தில் சொப்னாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை மற்றும் சுங்க இலாகா அமைப்புகள் இதுவரை 100 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியுள்ளன. ஆனால் இதுவரை இவருக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சுங்க இலாகாவும் மத்திய அமலாக்கத்துறையும் மீண்டும் சிவசங்கரிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த விசாரணையின் போது கண்டிப்பாக சிவசங்கர் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியானது. இதை அறிந்த சிவசங்கர் நேற்று கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரலாம்.

*  சொப்னா சிறை மாற்றம்
தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னாவும், சந்தீப் நாயரும் கொச்சியில் இருந்து திருச்சூர் சிறைக்கு முதலில் மாற்றப்பட்டனர். இவர்கள் மீது சுலங்க இலாகா காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இதனால், இருவரும் நேற்று திருவனந்தபுரம் சிறைக்கு மாற்றப்பட்டனர். சந்தீப் நாயர் திருவனந்தபுரம் மத்திய சிறையிலும், சொப்னா அட்டங்குளங்கரை மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Tags : Sivasankar ,IAS , Petition filed seeking bail before IAS officer Sivasankar involved in gold smuggling
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...