×

உபி. மாநிலங்களவை தேர்தலில் 8 இடங்களை பாஜ உறுதியாக பிடிக்கும்

லக்னோ: உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவையின் மொத்த பலம் 403. இருப்பினும், தற்போது 395 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். பாஜ 304 எம்எல்ஏ.க்களுடன் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்கிறது. எதிர்க்கட்சிகளான சமாஜ்வாடி 48, பகுஜன் சமாஜ் 18, அப்னா தளம் 9, காங்கிரஸ் 7, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 4 உறுப்பினர்களை கொண்டுள்ளன. இது தவிர, சுயேச்சைகள் 5 பேர் உள்ளனர். அதே போல், மாநிலங்களவை எம்பி. இடங்களில் உபி.க்கு 31 சீட்கள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி, இதில் பாஜ 17, சமாஜ்வாடி 8, பகுஜன் சமாஜ் 4, காங்கிரசுக்கு 2 எம்பி.க்களும் உள்ளனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை இடங்களுக்கும், உத்தரகாண்டில் ஒரு காலி இடத்துக்கும் நவம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில், உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கும் 10 இடங்களில் 8 இடங்களை பாஜ பிடிப்பது உறுதியாகி இருக்கிறது. இது பற்றி அரசியல் நிபுணர்கள், `உபி.யில் ஒரு மாநிலங்களவை இடத்தை பெற 38 எம்எல்ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால், தற்போது 304 எம்எல்ஏ.க்களை வைத்திருக்கும் பாஜ 8 இடங்களை எவ்வித சிரமமும் இல்லாமல் எளிதில் வென்று விடும் வாய்ப்புள்ளது. 48 எம்எல்ஏ.க்கள் உள்ள சமாஜ்வாடிக்கு ஒரு இடம் கிடைப்பது உறுதி. அதே நேரம், காங்கிரஸ், பகுஜன் இணைந்தாலும் அல்லது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் கூட 2 மாநிலங்களவை இடங்களை பெற முடியாது,’ என தெரிவித்துள்ளனர். இந்த தேர்தல் மூலம், கூடுதல் இடங்கள் கிடைப்பதால், மாநிலங்களவையில் பாஜவின் பலம் மேலும் அதிகரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : BJP ,state assembly elections , உபி. The BJP is all set to win 8 seats in the state assembly elections
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...