×

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வெற்றிவேல் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமமுக. பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேலுக்கு சில தினங்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதை தொடர்ந்து, அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், தொற்று உறுதியானதை தொடர்ந்து, 6ம் தேதி முதல், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று முதல் அவரது உடல்நிலை மோசடைய துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோயாளியான வெற்றிவேல் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Victor , Victor's health continues to suffer from corona infection
× RELATED அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகர்...