பொருளாதாரம் 10.3 சதவீதம் சரியும் வங்கதேசத்தைவிட இந்தியாவின் நிலை மோசம்: சர்வதேச நிதியம் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 10.3 சதவீதம் சரியும் என, சர்வதேச நிதியம் கணிப்புவெளியிட்டுள்ளது. இதன்மூலம், வங்கதேசத்தை விட இந்தியா பின்தங்கியுள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியம், உலக பொருளாதார நிலை தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 10.3% சரிவடையும் என சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட கணிப்பில், 4.5% சரிவை சந்திக்கும் என தெரிவித்திருந்தது. புதிய கணிப்பு, ரிசர்வ் வங்கி, உலக வங்கி மதிப்பீடுகளை ஒட்டி அமைந்துள்ளது.

இதுபோல், உலக பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 4.4% சரியும். உலக நாடுகளில் சீனாவின் பொருளாதாரம் மட்டுமே வளர்ச்சி அடையும். இதன் வளர்ச்சி 1.9% ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது. ஐஎம்எப்பின் ஆய்வறிக்கையில், இந்தியாவின் தனி நபர் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 1,877 டாலராக சரியும் என கூறியுள்ளது. ஆனால், வங்கதேசத்தில் தனிநபர் ஜிடிபி 1,888 டாலராக இருக்கும் என தெரிவித்துள்ளது. அதாவது, ஊரடங்கு காரணமாக, வங்கதேசத்தை விட இந்தியாவின் பொருளாதாரம் படுமோசமான சரிவைச் சந்திக்கும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் இரட்டை இலக்க சரிவை சந்திக்கும் என்பது, தொழில்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>