×

ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

துபாய்: ஐபிஎல் டி20 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்  தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஷிகார் தவான் 57 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 53, ஸ்டோனிஸ் 18 ரன்கள் அடித்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சர் 3, தியாகி 1, கோபால் 1, உனாத்கட் 2 விக்கெட் வீழ்த்தினர். 162 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. இதுவரை டெல்லி அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் உள்ளது.

Tags : IPL T20 ,Delhi ,Rajasthan , IPL T20, Delhi, Rajasthan
× RELATED முன்னேறும் முனைப்புடன் குஜராத் – டெல்லி இன்று மோதல்