×

நீட் தேர்வால் உயிரிழந்த அரியலூர் அனிதா கிராமத்தில் ஒரு மாணவி மருத்துவராகிறார்

* பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க ஏற்பாடு
* கனவு சிதைந்த அதே இடத்தில் மீண்டும் உயிர் பெறுகிறது

அரியலூர்: நீட் தேர்வால் உயிரிழந்த அரியலூர் அனிதா கிராமத்தில் ஒரு மாணவி மருத்துவராகிறார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் அனிதா, இவர் மருத்துவம் பயிலும் நோக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிளஸ் 2வில் 1176 மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் தோல்வியடைந்தார். இதனையடுத்து நீட் தேர்விற்கு எதிராக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு போராடினார். இருப்பினும் மருத்துவராகும் கனவு தகர்ந்ததால் வருத்தத்தில் இருந்தவர் செப்.1ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்விற்கு எதிரான முதல் தற்கொலை என்பதால் இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதே குழுமூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கர் தனலட்சுமி தம்பதியினருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இளையமகள் சௌந்தர்யா(17) விற்கும் மருத்துவம் படிக்க வேண்டும் என்பது விருப்பம். இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று +2 வில் 410 மதிப்பெண் மட்டுமே பெற்றாதால் தன்னால் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவம் படிக்க இயலுமா என அச்சத்தில் இருந்தார். இதுகுறித்து அனிதாவின் சகோதரர் மணிரத்னத்திடம் தெரிவித்திருந்தார். அவரின் சிபாரிசின் பேரில், அனிதாவின் உயிர் தியாகத்திற்கு மரியாதை செய்ய நினைத்த டாவோ மெடிக்கல் ஸ்கூல், பவுன்டேஷன் மற்றும் ட்ரான்ஸ்வேர்ல்டு குருப் ஆஃப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சேர்மன் டாக்டர் டேவிட் கே பிள்ளை, அனிதாவின் கிராமத்தை சேர்ந்த சௌந்தர்யாவை மருத்துவராக்க முன் வந்து அதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பினை டாவோ மெடிக்கல் ஸ்கூல், பவுன்டேஷன் மற்றும் ட்ரான்ஸ்வேர்ல்டு குருப் ஆஃப் நிறுவனத்தின் சார்பாக மருத்துவர் ரேச்சல் வழங்கினார். மாணவி செளந்தர்யாவை பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவப்படிப்பு படிக்கவைக்க ஏற்பாடு செய்திருப்பதோடு, அதற்கான விமானசெலவு, தங்குமிடம் உள்ளிட்ட முழு செலவையும் டாவோ மெடிக்கல் ஸ்கூல், பவுன்டேஷன் சார்பாக ஏற்றுக்கொண்டுள்ளார், மேலும் சௌந்தர்யாவுடன் 3 ஏழை மாணவர்களையும் மருத்துவப்படிப்பு படிக்க வைக்கிறது டாவோ மெடிக்கல் ஸ்கூல் ஃபவுன்டேஷன் மற்றும் ட்ரான்ஸ்வேர்ல்டு குருப் ஆஃப் நிறுவனங்கள்.

Tags : Anita ,village ,Ariyalur , Anita, a student doctor from Ariyalur, who died due to NEET exam
× RELATED கிராமத்து கோழி ரசம்