×

ஐதராபாத்தை வீழ்த்தி அசத்தல் : இந்த வெற்றி மிக முக்கியமானது :சென்னை கேப்டன் டோனி பேட்டி

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடந்த 29வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில்  6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் சேர்த்தது. டுபிளசிஸ் முதல் பந்திலேயே கேட்ச் ஆனார். 21 பந்தில் 31 ரன் எடுத்து சாம்கர்ரன் போல்டு ஆனார்.  ராயுடு 41 (34 பந்து) ஷேன் வாட்சன் 42 (38 பந்து), டோனி 21ரன்னில் (13 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினர்.  ஜடேஜா 25 ரன்னில் (10 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் டி.நடராஜன், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 168 ரன் இலக்கை விரட்டிய ஐதராபாத் அணியில் கேப்டன் வார்னர் 9, பேர்ஸ்டோ 23, மனிஷ் பாண்டே 4 , பிரியம் கார்க் 16, விஜய் சங்கர் 12 ரன்னிலும் நடையை கட்டினர். ஒருபுறம் தனி நபராக போராடிய வில்லியம்சன் 57 (39 பந்து, 7 பவுண்டரி) ரஷித்கான் 14 ரன்னிலும் வெளியேறினர். ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களே எடுத்தது. இதனால் சென்னை 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை தரப்பில் கரண் ஷர்மா, வெய்ன் பிராவோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 8வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 3வது வெற்றியாகும். ஐதராபாத் 5வது தோல்வியை சந்தித்தது. இதே மைதானத்தில் ஐதராபாத்திடம் 7 ரன் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு சென்னை பழி தீர்த்துக்கொண்டது.


வெற்றிக்கு பின் சென்னை கேப்டன் டோனி கூறுகையில், இந்த 2 புள்ளிகளை பெறுவது முக்கியம் என நான் நினைக்கிறேன். இந்த ரன் ஒரு சமமான இலக்கு என நினைத்தேன். நான் வழக்கமாக முதல் 6 ஓவர்களை பொறுத்து இலக்கை மதிப்பிடுகிறேன். தொடக்கத்திலேயே 2 விக்கெட் தேவையாக இருந்தது. இதனை பவுலர்கள் செய்தனர்.

குர்ரன் எங்களுக்கு ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர். சிறந்த ஆல்ரவுண்டரான அவர் சுழற்பந்து வீச்சில் நன்றாக ஆடுகிறார். அவரால் வேகமாக 15-45 ரன்களை வரை எடுக்க முடியும். டெத் ஓவர்களிலும் பந்துவீச்சில் அவரைபயன்படுத்தலாம், என்றார்.ஐதராபாத் கேப்டன் வார்னர் கூறுகையில், பிட்ச் மெதுவாக இருந்தது. 160 வரை சேசிங் இலக்குதான் என நினைத்தேன். ஆனால் அதற்கு மேல் எப்போதும் கடினமாக இருக்கும். இன்று கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அணியில் 6,7 பந்து வீச்சாளர்கள் இருப்பது உதவுகிறது. பவர் பிளேவில் எப்போதும் ஒரு சவால் இருக்கிறது. அதற்கு ஏற்ப பவுலர்களை தேர்வு செய்யவேண்டியது கட்டயாம். வரும் போட்டிகளில் பிட்ச்சின் தன்மையை பொறுத்து அணியை தேர்வு செய்ய வேண்டும். அடுத்த சில நாட்களில் நாங்கள் சிறந்த அணிகளை எதிர்கொள்வோம். எனவே நான் சவாலுக்கு தயாராக இருக்கிறேன், என்றார்.

Tags : Hyderabad ,Tony ,victory ,interview ,Chennai , Hyderabad, Stunning, Victory, Chennai Captain, Tony
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்