×

யானை மீது ஏறி யோகா செய்த பாபா ராம்தேவ், கீழே விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல்

மதுரா:உத்தரபிரதேச மாநிலம் மதுராவின் கோகுலில் குரு ஷர்தானந்தா ஆசிரமத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் (54) வந்தார். அங்குள்ள மாணவர்கள் மற்றும் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு யோகா பயிற்சியை செய்து காண்பித்தார். இந்த நிகழ்ச்சி தனியார் தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் யானை மீது ஏறி யோகா செய்யும் நிகழ்வின் போது, எதிர்பாராத விதமாக யானை அசைந்ததால், திடீரென பாபா ராம்தேவ் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பாபா ராம்தேவிற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த, வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக, பாபா ராம்தேவ் கொரோனா வைரசை குணப்படுத்தும் முதல் ஆயுர்வேத மருந்துகள் என்று அறிமுகப்படுத்தினார். இருப்பினும், சில மணிநேரங்களிலேயே, ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திடம் மருந்துகளின் பெயர் மற்றும் கலவை குறித்த விவரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. மேலும், கொரோனா குணப்படுத்தும்  மருந்து என்ற பெயரில் விளம்பரப்படுத்துவதற்கும் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Baba Ramdev , Elephant, Yoga, Baba Ramdev, Viral
× RELATED பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி