தனிநபர் வருவாயில் வங்கதேசம் இந்தியாவை முந்தப்போகிறது; 6 ஆண்டுகளில் பாஜகவின் அருமையான சாதனை: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி : தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம், இந்தியாவுக்கு நெருக்கமாக வந்துவிட்டார்கள் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ 6 ஆண்டுகளில் பாஜகவின் அருமையான சாதனை” என விமர்சித்துள்ளார். சர்வதேச நிதியம்(ஐஎம்எப்) உலக நாடுகள் குறித்த பொருளாதார வளர்ச்சி அறிக்கை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை நெருங்கியுள்ளதாகவும்  நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சர்வதேச நிதியம் வெளியிட்ட அறிக்கையை குறிப்பிட்டு, வரைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசை விமர்சித்துள்ளார்.அதில் “ பாஜகவின் வெறுப்பு நிரம்பிய கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டு அருமையான சாதனை. வங்கதேசம் இந்தியாவை முந்தப் போகிறது” என்று தெரிவித்து கிண்டல் செய்யும் விதமாக கைதட்டும் படங்களையும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>