×

யாருக்காக இந்த 5 வீடுகளை கட்டியிருக்கிறார்..?!

நன்றி குங்குமம்

இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் வர்கீஸ். ஏழ்மையின் காரணமாக அவரால் படிக்க முடியவில்லை. தனது 22 வயதில் இராணுவத்தில் டிரைவராக வேலைக்குச் சேர்ந்தார். அவருக்குத் திருமணமாகி நான்கு குழந்தைகள். பணி ஓய்வுக்குப் பின் பல்வேறு பிசினஸ் செய்து செல்வச்செழிப்புடன் இருக்கிறார். இப்போது வயது எண்பதைத் தாண்டிவிட்டது.

தன் மனைவியுடன் இணைந்து கேரளாவின் திருச்சூரில் ஐந்து வீடுகளைக் கட்டியிருக்கிறார். ஒவ்வொரு வீடும் 600 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஒரு வீடு கட்ட ரூ.7 லட்சம் ஆகியிருக்கிறது. இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா? அந்த வீடுகளை தன் குழந்தைகளுக்காகவோ, வாடகைக்கு விடவோ வர்கீஸ் கட்டவில்லை. வீடு இல்லாத ஐந்து பேருக்கு அந்த வீடுகளை இலவசமாகக் கொடுக்கப்போகிறார்!யார் அந்த ஐந்து பேர்... என்பதுதான் கேரளாவில் செம வைரலாகிக்கொண்டிருக்கும் கேள்வி.

தொகுப்பு: த.சக்திவேல்

Tags : houses , For whom has he built these 5 houses ..?!
× RELATED நாகை மாவட்டத்தில் 143 குடிசை வீடுகள் நிவர் புயலால் சேதம்