×

வடகொரியா ராணுவ அணி வகுப்பில் கண்ணீர் விட்டு கதறிய கிம் ஜாங் உன் :மக்களிடம் மன்னிப்பு கோரினார்!!

பியோங்யாங்,:வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ராணுவ அணி வகுப்பு நடைபெற்றது. அப்போது வடகொரியா Hwasong-16 என்ற புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், ராணுவ அணி வகுப்பு நிகழ்ச்சியில் போது பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் பேசியது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ‘எங்கள் நாட்டு மக்கள் வானத்தை விட உயரமாகவும், கடல் போன்று ஆழமாகவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

ஆனால், நான் அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றவில்லை. இதற்காக மிகவும் வருந்துகிறேன். இந்த நாட்டை வழிநடத்திய எனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோருக்கு பின், நான் இந்த நாட்டை வழி நடத்தி வருகிறேன். மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி; எனது பணிகள் எப்போதும் நேர்மையாகவே இருக்கும். உங்கள் வாழ்க்கையில் உள்ள சிரமங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது’ என்று உருக்கமாக பேசினார். அப்போது, கிம் கண்கலங்கி அழுதார். கிம்மின் உரையைக் கேட்டு அங்கிருந்த மக்கள், ராணுவ வீரர்கள் என பலரும் கண்கலங்கினர். ஆனால், கிம்மின் இந்த உணர்ச்சிவசமான உரையைக் கண்ட ஆய்வாளர்கள் பலரும், மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக அதிபர் கிம் இப்படி பேசியுள்ளதாக கூறுகின்றனர்.

Tags : Kim Jong Un ,team ,North Korean , North Korea, military team, tears, Kim Jong Un
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...