×

பதற்றமான லே பகுதியில் எதிர்கட்சி நாடாளுமன்ற குழு வரும் 28, 29ல் ஆய்வு


புதுடெல்லி,:எதிர்க்கட்சி உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற குழு வரும் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு தேதிகளில் பதற்றமான லே பகுதியில் நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளனர்.இந்தியா-  சீனா எல்லை பிரச்சனை காரணமாக லடாக்கில் உள்ள லே பகுதி பெரும் பதற்றம் கொண்டதாக தொடர்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக இதுகுறித்து சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கையில் கூட லே போன்ற கடுமையான இடங்களில் பணிபுரியக்கூடிய வீரர்களுக்கு தரமான பாதுகாப்பு உடைகள், உணவு மற்றும் பனிச்சறுக்கு வாகனங்கள் உட்பட பல முக்கிய உபகரனங்கள் வழங்கப்படுவது கிடையாது என கடும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து மேற்கண்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் அதிர்ராஜன் சவுத்திரி தலைமையிலான எதிர்க்கட்சிக் எம்பிகளை கொண்ட குழு, பதட்டம் நிறைந்த லடாக் பகுதியில் ஆய்வு நடத்த வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து அவர்களது கோரிக்கையை ஏற்பதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அக்டோபர் அதாவது இந்த மாதம் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு தேதிகளில் மேற்கண்ட நாடாளுமன்ற எதிர்கட்சி குழு லே பகுதியில் நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளனர்.

   மேலும் அவர்கள் ராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் ஆகியோரிடமும் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது அவர்களுக்கு கிடைக்கக் கூடிய உணவு, பாதுகாப்பு கவசங்கள் உட்பட அனைத்தையும் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களைத் தவிர பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தவுள்ள இந்த குழு, இதுபோன்ற இடங்களில் வேலை செய்யும் அவர்களுக்கு மேற்கொண்டு எந்த மாதியான முக்கிய அத்யாவசிய வசதிகள் தேவைப்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்து, அதொடர்பான முழு விவரங்களை கொண்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் கொடுப்பார்கள் என தெரியவருகிறது.

Tags : Opposition Parliamentary Committee , Tension, Lay Area, Opposition, Parliament, Committee
× RELATED டெல்லியில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற குழு தலைவர்கள் ஆலோசனை..!!