×

இன்னும் 30 நாள் தான் இருக்கு.. தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா?... சிறப்பு பேருந்துகள் புக்கிங் தொடங்கிடுச்சு...

சென்னை:  தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்கான பேருந்து டிக்கெட் முன்பதிவு ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. SETC மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு ஒருமாதமே உள்ளநிலையில், தற்போது 700 சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 300 கி.மீக்கு அதிகமான தொலைவுள்ள இடங்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சொகுசு, ஏசி பஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோவில் போன்ற இடங்களுக்கு அதிக பஸ்கள் இயக்கப்படும். தற்போது 1,100 பஸ்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். கொரோனா காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தற்போதைய நிலவரப்படி 450 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 30 நாட்களே உள்ளன. அப்போது ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவர்களின் வசதிக்காக 700 சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்வோர் www.tnstc.in என்ற அரசு போக்குவரத்துக்கழக இணையதளத்தில் சென்று தீபாவளி அன்று இயக்கப்படும் பஸ்களில் முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.  எனினும் முன்பதிவை பொறுத்து அதிகளவு பஸ்கள் இயக்கப்படும் என்று விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : city ,Deepavali , India, corona, healed, rate...
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு