×

மகிழ்ச்சியான செய்தி.. இந்தியாவில் 87% ஆக எகிரிய குணமடைந்தோர் விகிதம்..மளமளவென சரியும் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.10 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 72 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக   பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 63,509 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 72,39,390 ஆக உயர்ந்தது.
* புதிதாக 730 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,10,586 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 74,632 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 63,01,928 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,26,876 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 87.05% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.53% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 11.42% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 11,45,015 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 9,00,90,122 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

*கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.

Tags : India , India, corona, healed, rate
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...