×

திருவனந்தபுரத்தில் நவராத்திரி பூஜை விழா தொடக்கம்: யாத்திரையாக எடுத்து செல்லப்படுகிறது, திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள்


திருவனந்தபுரம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி பூஜை விழா தொடங்கியது. இன்று காலை 8 மணி அளவில் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகை மேல்மாடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாளை மாவட்ட கோவில்களின் இணை ஆணையரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளி மலை முருகன், தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் யானை மற்றும் பல்லக்கு வாகனங்களில் எழுந்தருளி திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டுள்ளது. கேரள, தமிழக அரசு மரியாதையுடன் சாமி சிலைகள் எடுத்துச் செல்லப்படுகிறது.

Tags : Pooja ,pilgrimage ,Thiruvananthapuram ,King ,Travancore , Thiruvananthapuram, Navratri Pooja, Festival
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை