×

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை:
தீபாவளி பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள், வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற கீழ்வரும் ஆவணங்களுடன் வரும் நாளை (15.10.2020) வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது கீழ்க்கண்ட ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்துக்கான புளு பிரிண்ட் வரைபடம் (6 நகல்) கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் மற்றும் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் (அ) வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம்.

உரிமத்திற்கான கட்டணம் ரூ.500 அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான் மற்றும் இருப்பிடத்திற்கான ஆதாரம், வரி ரசீது புகைப்படம் 2 (பாஸ்போர்ட் சைஸ்) இருக்க வேண்டும். தங்களின் ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முடிவு பெற்றவுடன், ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடனும் தற்காலிக உரிமத்தின் ஆணையினை தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே இ-சேவை மையம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். மேற்கண்ட தேதிக்கு பின் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Fireworks Shops , Apply to Fireworks Shops for Deepavali: Collector Information
× RELATED தமிழ்நாடு முழுவதும் 7,200 பட்டாசு...