வீட்டுவசதி வாரியம் சார்பில் மனைகள் வாங்குவதற்கு அலைமோதிய கூட்டம்

பூந்தமல்லி: செவ்வாப்பேட்டையில் வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் மொத்தம் 64 மனை பிரிவுகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக பூந்தமல்லியில் உள்ள திருமழிசை துணைக்கோள் நகர கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்களை பெற நேற்று கடைசி நாள் என்பதால் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். இதுகுறித்து வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது, “செவ்வாய்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்த மனைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 64 மனைகள் உள்ளன. ” என்றார்.

Related Stories:

>