×

திருநங்கை வீட்டில் திருட்டு

திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல் மேற்கு தென்றல் நகர் 8வது தெருவை சேர்ந்தவர் கோபிகா(25). திருநங்கை. கடந்த 7ம் தேதி கோபிகா வீட்டை பூட்டி விட்டு திருப்பதிக்கு சென்றார். பின்னர், நேற்று வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த கோபிகா உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ஒரு ஜோடி கம்மல், அரை கிலோ வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது. புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Transgender home theft
× RELATED போலீஸ் ஒட்டிய எச்சரிக்கை போஸ்டரால்...