சமக வர்த்தகர் அணி செயலாளர் நீக்கம்

சென்னை: சமக வர்த்தகர் அணி செயலாளர் கே.ஜே. நாதன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: வர்த்தகர் அணிச் செயலாளராக பதவி வகித்த கே.ஜே.நாதன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தால் நேற்று (13ம் தேதி) முதல் அவர் வகித்து வந்த அப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories:

>