×

11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு நவ.9ல் தேர்தல்

புதுடெல்லி: ‘உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டில் 11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெறும்,’ என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அருண் சிங், நீரஜ் ஷேகார் உள்ளிட்ட 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் வருகிற நவம்பர் 5ம் தேதியுடன் முடிகிறது. அதேபோல், நடிகரும், அரசியல்வாதியுயான ராஜ் பாப்பரின் உத்தரகாண்ட் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலமும் நவம்பர் 25ம் தேதியுடன் முடிகிறது. இதனை தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்கள், உத்தரகாண்டில் ஒரு இடத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் அதே நாளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 20ம் தேதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும்.

Tags : Elections , Elections on November 9 for 11 state assembly seats
× RELATED சட்டமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் வெற்றி கூட்டணி தொடரும்