×

கேரள திரைப்பட விருது அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரள அரசின் கடந்த ஆண்டுக்கான சிறந்த சினிமா கலைஞர்கள் விருது நேற்று அறிவிக்கப்பட்டது. கேரள அரசின் கடந்த ஆண்டுக்கான சிறந்த சினிமா கலைஞர்கள் விருதை  திருவனந்தபுரத்தில் காலாசாரத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் அறிவித்தார். அதன் விபரம் வருமாறு: சிறந்த நடிகர்: ஸ்வராஜ் வெஞ்ஞாறமூடு (படங்கள்: ஆன்ட்ராய்டு குஞ்ஞப்பன், விக்ருதி), சிறந்த நடிகை: கனி குஸ்ருதி (படம்: பிரியாணி), சிறந்த படம்: வாசந்தி (இயக்குநர்கள் ஷினோஸ் ரகுமான், சஜாஸ் ரகுமான்), சிறந்த இயக்குநர்: லிஜோ ஜோஸ் பெல்லிசேரி (படம்: ஜல்லிக்கட்டு), சிறந்த இசையமைப்பாளர் சுஷின் ஸ்யாம் (படம்: கும்பளங்கி நைட்ஸ்), சிறந்த பின்னணி பாடகர்: நஜீம் அர்ஷாத் (படம்: கும்பளங்கி நைட்ஸ்), சிறந்த பின்னணி பாடகி: மதுஸ்ரீ நாராயணன், சிறந்த புதுமுக இயக்குநர்: ரதீஷ் பொதுவாள் (படம்: ஆன்ட்ராய்டு குஞ்ஞப்பன்), சிறந்த குணச்சித்திர நடிகர்: பஹத் பாசில் (படம்:  கும்பளங்கி நைட்ஸ்), சிறந்த குணச்சித்திர நடிகை: சுவாசிகா (படம்: வாசந்தி). 


Tags : Kerala Film Awards Announcement , Kerala Film Awards Announcement
× RELATED தேர்தல் பத்திரம் உலகின் மிகப்பெரிய...