×

மத்திய அரசு ரூ.1000 வழங்குவதாக வதந்தி: கணக்கு தொடங்க போஸ்ட் ஆபீசில் குவிந்த மக்கள்

தேனி: போஸ்ட் ஆபீசில் சேமிப்பு கணக்கு தொடங்கினால், மத்திய அரசு ஆயிரம் ரூபாய் பணம் மானியமாக தருகிறது என தவறாக வதந்திய பரவியதால் தேனி தலைமை போஸ்ட் ஆபீசில் பொதுமக்கள் குவிந்தனர். தேனி தலைமை போஸ்ட் ஆபீசில் நேற்று காலை முதல் பொதுமக்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. பெண்கள் நீண்ட வரிசையில் நின்று 0 பேலன்ஸ் உடன் சேமிப்பு கணக்கு தொடங்கினர். கூட்டம் மிகவும் அதிகமாக இருந்ததால் அதிகாரிகளும் சிரமத்திற்குள்ளாகினர். போஸ்ட் ஆபீசில் சேமிப்பு கணக்கு தொடங்க இவ்வளவு ஆர்வம் காட்ட காரணம் என்ன என்பது குறித்து குவிந்த பெண்களிடம் கேட்ட போது, ‛போஸ்ட் ஆபீசில் பணம் ஏதுமின்றி (0 பேலன்ஸ் உடன்) வங்கி கணக்கு தொடங்கலாம்.

இதற்கு ஆதார் அட்டையும், மொபைல் நம்பர் மட்டும் போதும். இப்படி கணக்கு தொடங்குபவர்களுக்கு மத்திய அரசு இந்த மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்துகிறது என தவகல் கிடைத்தது. இதனால் கணக்கு தொடங்க குவிந்துள்ளோம்’ என்றனர்.
இதுகுறித்து அஞ்சல்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘எப்போது வேண்டுமானாலும் 0 பேலன்ஸ் உடன் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். தற்போது சேமிப்பு கணக்கு வாரம் கடைபிடிக்கப்படுவதால் இந்த வாரத்தை முகாம் போல் கடைபிடிக்கிறோம். போஸ்ட் ஆபிசில் சேமிப்பு கணக்கு தொடங்கினால், எதிர்காலத்தில் மத்திய அரசும், நலவாரியங்களும் மக்களுக்கு வழங்கும் மானியத்தை இந்த சேமிப்பு கணக்கில் செலுத்தும் என நாங்கள் பிரசாரம் செய்தோம்.

இதனை மக்கள் தவறாக புரிந்து கொண்டனர். தவிர இங்கு கணக்கு தொடங்கினால் பிற வங்கிகளில் பயன்படுத்துவது போல் பயன்படுத்தலாம். இதனை மக்களுக்கு புரிய வைக்க முடியவில்லை. அடுத்த மாதம் ஆயிரம் ரூபாய் கேட்டு வந்து நின்று விடுவார்களோ  என அச்சமாக உள்ளது’ என்றனர்.

Tags : government ,post office , Rumor has it that the central government will provide Rs.1000: People gathered at the post office to open an account
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...