×

முக்கூடல் அருகே மாடுகள் விஷம் வைத்து சாகடிப்பு

பாப்பாக்குடி: முக்கூடல் அருகே மர்ம நபர்கள் விஷம் வைத்ததில் அதனைத் தின்ற 4 மாடுகள் உயிரிழந்தது. முக்கூடல் அருகேயுள்ள இலந்தை குளம் கிராமத்தில் அதிக அளவில் விவசாயிகள் உள்ளனர். இவர்கள் வளர்க்கும் பெரும்பாலான கால்நடைகள் பகலில் தாமாகவே மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பி விடும். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்றிருந்த இதே கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஜேசு ராயப்பன்(36), யோவான்(52), ஜெபஸ்தியான்(45) மற்றும் ஜேசுராஜ்(31) ஆகியோருக்கு சொந்தமான 3 காளை மற்றும் 1 பசு மாடு அடையாளம் தெரியாத நபர்கள் வைத்திருந்த விஷத்தை தின்று நேற்று காலை உயிரிழந்தது.

மேலும் ஒரு மாடு சுய நினைவின்றி உள்ளது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த முக்கூடல் எஸ்ஐ காவுராஜன் மற்றும் போலீசார், மாடுகளுக்கு விஷம் வைத்த நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : trio , Cows near the trio were poisoned and slaughtered
× RELATED திருப்புத்தூரில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து