×

ஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு

துபாய் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் இன்று நடக்கும் 29 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை அணி களமிறங்க உள்ளது.

சென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியடைந்து 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் 7  போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியடைந்து 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : IPL T20 ,Sunrisers Hyderabad , IPL T20: Chennai won the toss and elected to bat against Sunrisers Hyderabad.
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?